Timothy

பாடம் 5

வசனம் – 3 சுபாவ அன்பில்லாமை!

3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,

செயற்கையாக அன்பை உற்பத்தி செய்ய முடியாது, இது நடிப்பாகும். ஆவியின் கனி அன்பாகும். இதுவே சுபாவ அன்பாகும். சுபாவ அன்பில்லாததின் விளைவு பலவிதமான துஷ்பிரயோகங்களாகும். வீட்டிலும், நாட்டிலும், சபையிலும் துஷ்பிரயோகங்கள் அநேகமாயிருக்கின்றன.

பரிசுத்தாவியானவர் நம்மில் செயற்பட்டு ஆவியின் கனியாகிய அன்புக்கு இடம் கொடுக்க தவறவேண்டாம்! இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,

• உலகம் போகிற போக்கை பாருங்கள், தலை சுற்றுகிறது.
• இச்சையடக்கம் இல்லாதவர்கள்

0 இணங்கமாட்டார்கள்,
0 கொடுமை செய்வார்கள்,
0 அவதூறு செய்வார்கள், 0 நல்லோரையும் பகைப்பார்கள்.

இவர்களை அடக்க முடியாததற்கான காரணம் இவர்களுக்குள் இச்சையடக்கம் இல்லாமையாகும்.

• இச்சையடக்கமும் ஆவியின் கனியாகும்.
• பின் நவீனத்துவ வாழ்வில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் – நிபந்தனைகளுக்கு இங்கு இடமில்லை.

சன்மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்கள் ஏளனம் செய்யப்பட்டு அரசியல் நேர்மை தவறியவர்களாக கருதப்படுகிறார்கள்.

துன்மார்க்கத்தை கடைப்பிடிப்பவருக்கு அரசியல் உரிமைகள் கோருவது நாளாந்த நடைமுறையாக மாறிவிட்டது. எங்கு போய் தலையை இடிக்கலாம்?

4.துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,

• தேவனை பிரியப்படுத்தாது தன்னை பிரியப்படுத்துகிறவர்கள் துரோகிகளும், தீமையை செய்ய துணிகரமுள்ளவர்களும் இறுமாப்புள்ளவர்களுமாகும்.

• இவர்களது செய்தி:

1) விதிமுறைகளை நீங்களே அமையுங்கள்.
2) யாருக்கும் பதில் கூற தேவையில்லை .
3) நானே முக்கியம்.
4) உங்களை சுற்றியே உலகம் சுற்ற வேண்டும்.

• ”வாழ்க்கை முறை தெரிவுகள்.”

எனக்கு சரியென நினைத்ததை நான் செய்வேன், யார் என்னை கேள்வி கேட்க முடியும்? இது எங்கு போய் முடியுமோ?

• எதையுமே புதிதாகவும் பெரிதாகவும் விநோதமாகவும் செய்வது இவர்களது மனப்பாங்காகும். இப்படியான மனப்பான்மை சபைக்குள் வந்துவிட்டதா?